6 ஆண்டுகளுக்கு பிறகு தெலங்கானாவில் மின் கட்டணம் 14% உயர்வு.. யூனிட்டுக்கு 50 காசுகள் வரை அதிகரிப்பு!!

ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில் வடக்கு மின் விநியோக நிறுவனம் (NPDCL) மற்றும் தெற்கு மின் விநியோக நிறுவனம் (SPDCL) ஆகியவை மின் கட்டணத்தை 18% உயர்த்தக் கோரி மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TSERC) கோரிக்கைகளை சமர்ப்பித்தனர். ஆனால், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை 14% மட்டுமே உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் தெலங்கானா மாநிலத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் வீடுகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.வீடுகளில் முதல் 50 யூனிட்டுகள் வரை யூனிட் ஒன்றுக்கு மின் கட்டணம் ரூ.1.45ல் இருந்து ரூ. 1.95 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் 51 முதல் 100 யூனிட்டுகள் வரை யூனிட் ஒன்றுக்கு மின் கட்டணம் ரூ.2.60ல் இருந்து ரூ.3.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் சலூன் கடைகள் உட்பட சிறு தொழில்களுக்கு மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: