உலக டென்னிஸ் தர வரிசை ஸ்வியாடெக் நெம்பர் ஒன்: முதலிடத்தில் ஜோகோவிச்

லண்டன்:  மயாமி ஓபன் டென்னிஸ் போட்டி முடிந்ததையடுத்து  வீரர்களுக்கான ஏடிபி டென்னிஸ் தரவரிசை, வீராங்கனைகளுக்கான டபிள்யூடிஏ டென்னிஸ் தரவரிசை பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

மகளிர்  டென்னிஸ் உலக தரவரிசயைில் முதல் இ டத்தில் இருந்த ஆஷ்லி பார்தி(7980புள்ளி, ஆஸ்திரேலியா) ஓய்வு பெற்றதையடுத்து 2வது இடத்தில் இருந்த  போலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் இடத்தை பிடிப்பது உறுதியானது. இந்நிலையில்  கத்தார் ஓபன், பிஎன்பி பாரிபா ஓபன், மயாமி ஓபன்  என 3 தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்றதால் ஸ்வியாடெக் 6711 வெற்றிப் புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். கூடவே   ‘நெம்பர் ஒன்’ ஆன முதல் போலாந்து வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

செக் வீராங்கனை  க்ரெஜ்சிகோவா(4975புள்ளி) 2 இடங்கள் முன்னேறி  2வது இடத்தையும்,  ஸ்பெயின் வீராங்கனை பவுளா படோசா(4970புள்ளி) 3 இடங்கள் முன்னேறி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.   சாக்கரி(கிரீஸ்),  முகுருசா(ஸ்பெயின்),   கொன்டவியட்(எஸ்டோனியா),  பிளிஸ்கோவா(செக் குடியரசு), டேனியலி(அமெரிக்கா) ,  சபலென்கா(பெலாரஸ்), ஆன்ஸ் ஜெபவூர்(துனிசியா) ஆகியோர்   முறையே 4முதல் 10வது இடங்களில் உள்ளனர்.

அதேபோல் வீரர்களுக்கான ஏடிபி   உலகத் தர வரிசையில்  நோவக் ஜோகோவிச்(8420புள்ளி) முதல் இடத்திலும், ரஷ்யாவின் டானில் மெத்வதேவ்(8410 புள்ளி) 2வது இடத்திலும் தொடர்கின்றனர்.  ஜெர்மனியின்  ஸ்வெரவ்(ஜெர்மனி),  ரபேல் நடால்(ஸ்பெயின்),   சிட்சிபாஸ்(கிரீஸ்), மாட்டீயோ(இத்தாலி),  கஸ்பர்(நார்வே),   ரூபலேவ்(ரஷ்யா), ஃபெலிக்ஸ்(கனடா),  நோரி(பிரிட்டன்) ஆகியோர் 3 முதல் 10 இடங்களில்  இருக்கின்றனர்.

மயாமி சாம்பியன் கார்லோஸ் 5 இடங்கள் முன்னேறி  11வது இடத்தில்  உள்ளார். அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டீனா வீரர்  பிரான்சிஸ்கோ செருன்டோலோ(23வயது)  52 இடங்கள் முன்னேறி 51வது இடத்தை முதல்முறையாக பிடித்துள்ளார்.

Related Stories: