கடைசி போட்டியில் ஆடுகிறார்..! இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர்

நியூசிலாந்து: நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் கடந்த வருட இறுதியில் ஓய்வை அறிவித்ததை அடுத்து இன்று  நெதர்லாந்துக்கு எதிராக தன்னுடைய கடைசி போட்டியை விளையாடி வருகிறார். நியூசிலாந்து அணியின் முக்கிய மற்றும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களில் ராஸ் டெய்லரும் ஒருவர். கடந்த 2006ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியில் அறிமுகமான ரோஸ் இவர் 15 ஆண்டுகளாக நியூசிலாந்து அணியின் முக்கியமான வீரராக ஜொலித்து வந்தார்.

நியூசிலாந்து அணியின் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெய்லர் கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 விதமான ஃபார்மெட்டுகளிலும் விளையாடி பல சாதனைகளை புரிந்ததோடு, .ஐபிஎல், பிக் பேஸ் மற்றும் நியூசிலாந்தின் கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியுள்ளார். மேலும், 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7683 ரன்களும், 233 ஒரு நாள் போட்டிகளில் 8581 ரன்களும், 102 டி20 போட்டிகளில் 1909 ரன்களும் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 19 சதமும், ஒருநாள் போட்டிகளில் 21 சதங்களும் எடுத்துள்ளார்.

அதிகபட்சமாக டெஸ்ட் போட்டிகளில் 290 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 181 ரன்களும் எடுத்திருக்கிறார் ராஸ் டெய்லர். 15 ஆண்டுகால கிரிக்கெட் கெரியரில் ஒரு ஐசிசி டிராபி கூட வெல்லவில்லை என்ற வருத்தத்தை , ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று அதன் மூலம் அந்த குறையை தீர்த்துக்கொண்டார் என்றே கூற வேண்டும். நியூசிலாந்து அணியின் மிகச்சிறந்த வீரர்களானஒருவரான ரோஸ் டெய்லர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.

Related Stories: