தேனி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் விரைவில் நிறைவேற்றப்படும்-ஊராட்சி ஒன்றிய சேர்மன் உறுதி

தேனி : தேனி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் நேற்று தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.  ஊராட்சி ஒன்றிய சேர்மன் சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.  வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.  இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

கிருஷ்ணசாமி : பூமலைகுண்டு கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.  கிராம பணிகளை பார்வையிட அதிகாரிகள் வரும்போது ஒன்றிய கவுன்சிலர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும்.அன்புமணி : உப்பார் பட்டியில் ஆண்களுக்கான கழிப்பறை கட்டித்தர வேண்டும். அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும்.

நாகலட்சுமி : கொடுவிலார்பட்டி கண்மாயில் தூர்வார வேண்டும். காலனி பகுதியில் சேதமடைந்த சிமெண்ட் சாலையை சீரமைத்து தர வேண்டும்.சங்கீதா :  தேனி ஒன்றியத்தில் எந்தெந்த கவுன்சிலர்களுக்கு எவ்வளவு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது இது குறித்து விபரம் வழங்க வேண்டும் கூட்டத்திற்கு வந்து செல்லவும், மக்கள் சேவை செய்யவும் பணம்     தேவைப்படுகிறது. எனவே கவுன்சிலர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

தனலட்சுமி :  சீலையம்பட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளாக  பழுதடைந்துள்ள கழிப்பறையை சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறேன். உடனடியாக இப்பணியை நிறைவேற்றிட வேண்டும்.மாலா : 10வது வார்டில் ஆர் சி தெருவில் மின் வயர் தாழ்வாக செல்கிறது. இதனை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 3வது வார்டில் கழிப்பறை கட்ட வேண்டும்.

கந்தவேல் : அரண்மனை புதூர் கிழக்குத் தெருவில் படித்துறை கட்ட வேண்டும். கோட்டை பட்டி கிழக்குத் தெருவில் கழிப்பறை கட்ட வேண்டும்.  மேலும் வீரசின்னம்மாள்புரம் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும். கோட்டைபட்டியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.

சேர்மன் சக்கரவர்த்தி: தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. தேனியிலும் மக்களுக்காக நிர்வாகம் நடந்து வருகிறது. அனைத்து வார்டுகளுக்கும் சமமாக நிதி பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதில் எந்த ஒரு கட்சி சார்ந்தும் பணிகள் நடக்கவில்லை. அதிகாரிகள் கிராமங்களுக்குச் செல்லும் போது, அந்தந்த பகுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவித்து ஆலோசனை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகள் முழுமையாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Related Stories: