தாம்பரம் - நாகர்கோவில் பண்டிகை கால சிறப்பு ரயில்: ஏப்ரல் 13ம் தேதி இயக்கப்படுகிறது

நாகர்கோவில்: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாகர்கோவில்-தாம்பரம் இடையே பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ரயில் எண்: 06005 தாம்பரம் - நாகர்கோவில் ஜங்ஷன் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 13ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். இந்த ரயிலுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நிறுத்தம் அனுமதிக்கப் பட்டுள்ளது.

ரயில் எண்: 06006 நாகர்கோவில் ஜங்ஷன் - தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 17ம் தேதி புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் காலை 4.10 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை ஜங்ஷன், திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நின்று செல்லும்.இந்த ரயில்களில் ஒரு 2 அடுக்கு ஏசி, 2 மூன்றடுக்கு ஏசி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளி மற்றும் லக்கேஜ் கம் பிரேக் வேன் பெட்டிகள் இடம்பெறும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: