போடி அரசு டெப்போ வளாகத்தில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டுகோள்

போடி: போடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கான்கிரீட் தளம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம், போடியில்  உள்ள தேவாரம் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இங்கு  80க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பணிமனை மேலாளர்,  அலுவலர்கள், பணியாளர்கள், கண்டக்டர், டிரைவர்கள் என 300க்கும் மேற்பட்டோர்  பணியில் உள்ளனர். இந்த பணிமனையில் கண்டக்டர்கள், டிரைவர்கள் ஓய்வெ  டுக்கும் அறை, கேண்டீன், மேனேஜர் அலுவலகம் ஆகியவை உள்ளன.

இந்நிலையில்,  பணிமனை வளாகத்தில் தரைத்தளம் மண்ணால் அமைக்கப்பட்டுள்ளதால், மழை பெய்தால்  சேறும், சகதியுமாக மாறுகிறது. இதனால், அலுவலர்கள், பணியாளர்கள் நடந்து  செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பஸ்களை டிரைவர்கள் வெளியே எடுத்துச்  செல்லும்போதும், உள்ளே கொண்டு வரும்போதும் தவிக்கின்றனர். தொடர் மழை  பெய்தால் தண்ணீர் தேங்கும் அவலம் உள்ளது. இதனால், பெரும்பாலான பஸ்களை  வெளியே நிறுத்துகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழைக்கு பணிமனை வளாகம் சேறும், சகதியாக தளம் மாறியது. இதனால், பஸ் டிரைவர்களும்,  பணியாளர்களும் அவதிப்படுகின்றனர். எனவே, பணிமனை வளாகத்தில் கான்கிரீட் தளமோ, தார்ச்சாலை ஓடுதளமோ அமைக்க மாவட்ட நிர்வாகமும், மண்டல போக்குவரது  நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: