அரூர் பகுதியில் பாக்கு அறுவடை பணி தீவிரம்

அரூர் : தர்மபுரி மாவட்டத்தில் அரூர் மற்றும் வள்ளிமதுரை அணைக்கட்டு பகுதி, பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு பகுதி, ராமியம்பட்டி, பறையப்பட்டி, மெணசி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பாக்கு பயரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால், தற்போது ஏராளமானோர் பாக்கு பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொடக்க கால செலவுகள் அதிகம் எனினும், 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஓரளவிற்கு நல்ல வருமானம் கிடைப்பதும், விவசாயப் பணிகளுக்கு போதிய கூலி ஆட்கள் கிடைக்காததும் பாக்கு பயிரிடும் பரப்பளவு அதிகரிக்க காரணமாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பாக்கு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக இருப்பதால், கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories: