மகளிர் உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி..!

வெலிங்டன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இன்றைய போட்டியில் தோல்வியடைந்ததால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், எஞ்சிய 2 இடங்களை பிடிக்க வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, இங்கிலாந்து அணிகளிடையே போட்டி நிலவியது. லீக் சுற்று இன்றுடன் நிறைவடையும் நிலையில், இங்கிலாந்து - வங்கதேசம் மற்றும் இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையே நடக்கும் ஆட்டங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா 71, கேப்டன் மிதாலி ராஜ் 68 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டி தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக லவுரா 80, டு பிரீஸ் 52 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர். இதன் மூலம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இன்றைய போட்டியில் தோல்வியடைந்ததால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா.

Related Stories: