சென்னையில் அண்ணாமலை பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜ 2ம் கட்ட தலைவர்களுக்கு மேடையில் அவமானம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று முன்தினம் பாஜ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர் வருவதற்கு முன்பாக பாஜ துணை தலைவர் வி.பி.துரைசாமி பேசிக்கொண்டிருந்தார். அவர், நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்து... என்று பேச ஆரம்பித்தார். அப்போது இன்னொரு மைக்கில் நம்முடைய மரியாதைக்குரிய மாநில தலைவர் மேடை அருகே வந்து கொண்டிருக்கிறார் என மாநில நிர்வாகி கரு.நாகராஜன் பேசத் தொடங்கினார். இதனால், கடுப்பான வி.பி.துரைசாமி, ‘‘அவர் வரட்டும். வந்தால் என்னய்யா... நீங்கள் என்ன மைக்கில் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். என்ன மிரட்டுகிறீயா’’ என்றார். அதற்குள் மாநில தலைவர் அண்ணாமலை மேடைக்கு வந்தார். அப்போது வி.பி.துரைசாமி, அண்ணாமலையிடம் ‘நான் மட்டும்தான் பேசவில்லை.

எல்லோரும் பேசி முடிச்சிட்டாங்க. நான் பேசட்டுமா?’’ என்றார். அதற்கு அண்ணாமலை பேசுங்கள் என்றார். இதேபோல பாஜ செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேச்சை தொடங்கியபோதும், மைக்கில் கரு.நாகராஜன் பேசிக்கொண்டிருந்தார். அவர் தலைவர் பின் பக்கமாக தான்  வருகிறார். அங்கே நின்றால் நமக்கு அவமானமாக இருக்காது. என்ன டிசிப்ளின் இது. மற்ற கட்சிகளும் நம்ப கட்சியும் ஒண்ணா. வாட்டர் பாட்டில், மோர் எல்லாம் 20,000 பாட்டில் இறக்கி வைத்து இருக்கிறது. எல்லாரும் வழிவிடுங்கள்’’ என்றார். இதனால், நாராயணன் திருப்பதியும் கடுப்பானார்.

தொடர்ந்து, இன்னொருவர் மைக்கில் பேசிக்கொண்டிருந்ததால் நாராயணன் திருப்பதி தனது பேச்சை நிறுத்தினார். அமைதியான பின்னரே அவர் பேச்சை தொடங்கினார். அவர் பேசி முடிப்பதற்குள் 10 முறையாவது கரு.நாகராஜன் இடையில் தனியாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் கடுப்பான நாராயணனை, அருகில் இருந்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தியபடியே இருந்தனர். இப்படி பாஜ 2ம் கட்ட தலைவர்களை பேச விடாமல் தடுத்த வீடியோக்கள் பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாராயணன் திருப்பதி தனது பேச்சை தொடங்கினார். அவர் பேசி முடிப்பதற்குள் 10 முறையாவது கரு.நாகராஜன் இடையில் தனியாக பேசிக் கொண்டிருந்தார்.

Related Stories: