உத்தரப்பிரதேச மாநில முதல்வராக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்பு.. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு!!

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநில முதல்வராக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்றுக் கொண்டார்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 273 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் பாஜ மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. பாஜ சட்டப்பேரவை தலைவரை தேர்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் லக்னோவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று நடந்தது. இதில், சட்டப்பேரவை தலைவராக யோகி ஆதித்யநாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் உத்தரப்பிரதேச முதல்வராக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா, பாஜ ஆளும் மாநில முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பதவியேற்பு விழா நடக்கும் மைதானத்தில் இருந்து தான் யோகி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருந்தார்.யோகி அமைச்சரவையில் இம்முறை 2 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கேசவ பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பாட்டக் ஆகியோர் உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டனர்.

Related Stories: