போடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ: பல நூறு ஏக்கரிலான அரியவகை மரங்கள் எரித்து முற்றிலும் சேதம்

தேனி: போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றியெரியும் காட்டுத்தீயால் அரியவகை மரங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமாகி வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள போடிமெட்டு, ஊத்தாம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் அருங்குளம் வடமலை நாச்சியார் கோயில் மலைப்பகுதிகளில் புதிதாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இங்கு வனவிலங்குகள் அதிகளவில் இருக்கும் நிலையில் அவை குடியிருப்பு பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன.

கொழுந்துவிட்டு எரியும் வனத்தீயை கட்டிற்குள் கொண்டுவர இயலாமலும், தீயை அணைக்க முடியாமலும் வனத்துறையினர் திண்டாடி வருகின்றனர். வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகவும், அடுப்புக்கரி எடுப்பதாகவும் சமூக விரோதிகள் காடுகளுக்கு தீ வைப்பது தொடர்கிறது. இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

Related Stories: