சின்னாளபட்டி பகுதி மயானத்திற்குள் கொட்டப்படும் குப்பைக்கழிவுகள்-மர்மநபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு

சின்னாளபட்டி : சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சி சார்பாக சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து அவற்றை உரமாக்குவதற்கு செம்பட்டி சாலையில் அஞ்சுகம் காலனி எதிரே வளம் மீட்பு பூங்கா உள்ளது.    பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் முறையாக உரக்கிடங்கிற்கு எடுத்துச்செல்லாமல் சின்னாளபட்டியில் உள்ள முக்கிய தெருக்களின் சந்திப்புகள் மற்றும் குளக்கரைகள், அரசு மருத்துவமனை காம்பவுன்ட் சுவர் பகுதி, காலி இடங்களில் கொட்டி தீவைத்து எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது தவிர பேரூராட்சியில் பணிபுரியும் அருந்ததியினர் சமுதாயத்தினருக்கு தனியாக மயானம் உள்ளது. இந்த மயானத்தை துப்புரவு மேற்பார்வையாளர்கள் குப்பைக்கழிவுகளை கொட்டி எரிக்கும் இடமாக மாற்றி வருகின்றனர்.

அருந்ததியினர் மயானத்தின் உள்ளே பொக்லைன் இயந்திரம் கொண்டு சுமார் 20அடி நீளத்திற்கு பள்ளங்களை பறித்து குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை குவித்திருந்தனர். நேற்று மாலை 5 மணியளவில் மர்ம ஆசாமிகள் தீ வைத்ததால் தீ விரைவாக பரவி அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த 200அடி நீளத்தில் இருந்த குப்பை கழிவுகள் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் சுமார் 2 மணிநேரம் புகை மண்டலமாய் காட்சியளித்தது. அந்த இடத்தில் மின் டிரான்ஸ்பார்மர் இருந்ததால் அதுவும் தீப்பிடித்து எரியும் நிலைக்கு வந்தது. தகவலறிந்து வந்த ஆத்தூர் தீயைணப்பு துறை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

Related Stories: