ராசிபுரம் அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்த சாலை-சீரமைக்க கோரிக்கை

ராசிபுரம் : ராசிபுரம் அருகே குருசாமிபாளையத்தை அடுத்த கல்லுபாளையம் பகுதியில் இருந்து ஓ.சவுதாபுரம், அக்கரைப்பட்டி, நடுப்பட்டி, அலவாய்ப்பட்டி, வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, அத்தனூர், மல்லூர் பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. சுற்றுவட்டார கிராம மக்கள், வாகன ஓட்டிகள் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.

வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கும் இதன் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

ஆனால், கல்லுபாளையம் பகுதியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வாகன ஓட்டிகள் சரிந்து விழும் அபாயம் உள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால், சிதிலமடைந்து காணப்படும் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Related Stories: