வேதாரண்யம் பகுதியில் 5 நாட்களுக்கு பிறகு கடல் சீற்றம் சற்று தணிந்ததால் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

வேதாரண்யம் : வேதாரண்யம் கடல் சீற்றம் சற்று தணிந்ததால், 5 நாட்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.வங்க கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக கடந்த 2ம் தேதி முதல் கோடிக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிரமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. சூறைக்காற்று மற்றும் மழை காரணமாகவும் மீன்வளத்துறை அறிவிப்பை ஏற்று கடந்த 5 நாட்களாக சுமார் 5000 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

கடந்த 5 நாட்களாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லத்தால் கடற்கரை வெளிச்சோடியது. மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. மீன்கள் வரத்து முற்றிலும் தடைபட்டதால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் ஓரளவு கடல் சீற்றம் தணிந்துள்ளதால் 5 நாட்களுக்கு பிறகு கோடிக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம் பகுதியில் ஒரு சில பைபர் படகுகளில மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர்.

Related Stories: