51வது தேசிய பாதுகாப்பு தினம் இளம் தலைமுறையினருக்கு பாதுகாப்பு கலாச்சாரத்தை மேம்படுத்தும் கருப்பொருளுடன் கொண்டாடப்படும்: தொழிலக பாதுகாப்பு இயக்குநர் ஜெகதீசன் அறிக்கை

சென்னை: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் இயக்குநர் ஜெகதீசன் வெளியிட்ட அறிக்கை:

தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 4ம் தேதி  தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 51வது தேசிய பாதுகாப்பு தினம் இளம் தலைமுறையினருக்கு பாதுகாப்பு கலாச்சாரத்தினை மேம்படுத்த பாடம் புகட்டுவோம் என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. இளம் தொழிலார்களுக்கு பாதுகாப்பு கலாச்சாரத்தினை புகுத்துதன் மூலம் வருங்கால இளம் சந்ததியினர் பாதுகாப்பு முறைகளை அடிப்படையிலேயே கடைபிடிக்கும் பொழுது விபத்துக்களே இல்லாத நிலை உருவாகக்கூடும்.

நம் நாட்டில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையிலும், தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும் முன்னிலையில் உள்ள தமிழகம் விபத்துக்களை குறைப்பதிலும், பாதுகாப்பான சூழலை உருவாக்குவதிலும் முன்னிலையில் உள்ளது. விபத்துக்கள் ஏற்படுவதில்லை, விபத்துக்கள் ஏற்படுத்தப்படுகின்றன என்பதே நமது தாரக மந்திரம்.தகுந்த சுய பாதுகாப்பு சாதனங்களை உபயோகப்படுத்தி, பாதுகாப்பான சூழலில் விபத்தில்லா உலகினை படைப்போம். அரசாங்கம், நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றி விபத்தில்லா இலக்கினை எட்டுவோம்.

 வியர்வை சிந்தி பாடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் நல வசதி ஆகியவற்றை பேணி காப்பதில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் பெரும் பங்கு வகிக்கும் என்பதையும் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.   தேசிய பாதுகாப்பு தினத்தை கவுரவிக்கும் விதத்தில் பாதுகாப்பு தின உறுதி மொழியினை ஏற்று தொழிலாளர்கள் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழல் சூழலின் மேன்மைக்காக நம்முடைய முயற்சிகளை முழுமையாக அர்ப்பணிப்பதுடன் இக்குறிக்கோள்களை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும்.

Related Stories: