சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ராட் மார்ஷ் காலமானார். 74 வயதான அவர் 1970-84ம் ஆண்டு கால கட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக 96 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதம் உள்பட 3633 ரன் எடுத்துள்ளார். மேலும் 355 விக்கெட் எடுக்க காரணமாக இருந்துள்ளார். இவை தவிர 92 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1225 ரன் எடுத்துள்ளதுடன், 124 விக்கெட்டுகள் எடுக்க காரணமாக இருந்துள்ளார்.