பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளில் புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு: அமைச்சர் சா.மு.நாசர் வாழ்த்து

பூந்தமல்லி: பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளில் வெற்றிபெற்ற புதிய கவுன்சிலர்கள் பதவியேற்றனர். பூந்தமல்லி நகராட்சியில் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றவர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். தேர்தல் அதிகாரி நாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் ரவிக்குமார் மாலதி, ஸ்ரீதர், பாத்திமா ஜெகரா, செந்தாமரை நெல்சன், ராஜகுமார், அசோக்குமார், கன்னிமரியாள் வின்பிரட், மெஹராஜ் ஷேக்தாவூத், தீபா யுவராஜ், காஞ்சனா சுதாகர், சௌந்தர் ராஜன், மீனாட்சி ஜெய்சங்கர் ஆகிய 12 திமுக கவுன்சிலர்களும், காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஜேம்ஸ், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரவிச்சந்திரன், கீதா மேகநாதன் 2 பேரும் மற்றும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தாமரைக்கண்ணன், நீலாவதி, ஜூலி ரஞ்சனி, வடிவேலன், கவிதா சுரேஷ், திருமலை ஆகிய 6 பேரும் கவுன்சிலர்களாக பதவியேற்றனர்.

பதவி ஏற்றுக் கொண்ட கவுன்சிலர்களுக்கு அமைச்சர் சா.மு.நாசர், ஆ. கிருஷ்ணசாமி எம்எல்ஏ, பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் பூவை ஜெயக்குமார், நகர செயலாளர் பூவை ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்துக் கூறினர். திருவேற்காடு நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 11 கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி என்கிற என்.ஈ.கே.மூர்த்தி, உமாபதி, ஆர்த்தி பிரபு கஜேந்திரன், ருக்மணி பவுல், சுதாகர், பிரதானம், விஜயலட்சுமி, நர்மதா குமாரி, நளினி, இளங்கோவன், சங்கர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஆனந்தி ரமேஷ், சுயேட்சைகளாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சாந்தி ராஜா, ஆஷா ஆசீர்வாதம், கோமதி, ஜானகி, காஞ்சனா, விக்னேஸ்வரன் 6 பேரும் கவுன்சிலர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு தேர்தல் அதிகாரி ரமேஷ் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். அப்போது நகராட்சி பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மற்றும் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பதவி ஏற்றுக் கொண்ட கவுன்சிலர்களுக்கு அமைச்சர் சா.மு.நாசர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.  

Related Stories: