மாசி மகா சிவராத்திரி : அக்னி தீர்த்த கடற்கரையில் நூற்றுக்கணக்கான மணல் லிங்கம் பிடித்து பக்தர்கள் பூஜை

ராமேஸ்வரம் : மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் வடமாநில பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் நூற்றுக்கணக்கான மணல் லிங்கம் பிடித்து பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வட மாநில பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதல் அக்னிதீர்த்த கடலில் வடமாநில பக்தர்கள் புனித நீராடினர். ராமர் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை போக்க கடற்கரையில் சீதை பிடித்த மணல் லிங்கத்திற்கு பூஜை செய்து வழிப்ட்டார் என்பது ஸ்தல வரலாறு.

இதை பின்பற்றி வடமாநில பக்தர்கள் இன்று அக்னி தீர்த்த கடற்கரையில் மணலில் லிங்கம் பிடித்து காசியில் இருந்து எடுத்து வந்த கங்கை தீர்த்தத்தை அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதனால் அக்னி தீர்த்த கடற்கரை நூற்றுக்கணக்கான மணல் லிங்கங்கள் நிறைந்து காணப்பட்டது. சிவராத்திரி சிறப்பாக காசியில் இருந்து வந்த சாதுக்களும் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இதனால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் நிறைந்து மாசி மஹா சிவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

Related Stories: