பெண்களின் சபரிமலை மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி வந்து அம்மனை வழிபடுதால் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் மாசிக்கொடை விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 10 நாள் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இதில் தமிழகம், கேரள உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான மாசிக்கொடை விழா இன்று காலை 8 மணி அளவில் திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 க்கு உஷ பூஜை, சிறப்பு செண்டை மேளம் ஆகியவை நடந்தது. நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் அரவிந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கருமங்கூடல் கே.எஸ்.வி.பவனிலிருந்து அம்மனுக்கு சீர் கொண்டு வரப்பட்டு அலங்கார பூஜை நடந்தது. மாலை 6.30 க்கு சாயரட்சை பூஜை, ராஜ ராஜஸ்வரி பூஜையும், திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.

Related Stories: