உக்‍ரைனில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர தீவிர முயற்சி: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

டெல்லி: உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்திய மாணவர்களை தாயகம் அழைத்து வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஷ்ய தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் தனது வான்வழியை  மூடியதால் அங்குள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுமாறு ரஷ்ய அதிபர் புதின் உடனான பேச்சுவார்த்தையின் போது, பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதின் உறுதியளித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகள் வழியாக தாயகம் அழைத்து வர வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்கள் தங்கள் நாடுகளின் வழியே இந்தியா திரும்ப அந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மதம் தெரிவித்துள்ளதாக ஜெய்சங்கர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: