குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது ரூ.6,000 கோடி நிலக்கரி ஊழல்: ராகுல் பகீர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் மோடி உட்பட 4 பாஜ முதல்வர்கள் இருந்த 14 ஆண்டுகளில் ரூ.6,000 கோடி நிலக்கரி ஊழல் நடந்துள்ளதாக ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் கடந்த 14 ஆண்டுகளில் நரேந்திர மோடி, ஆனந்திபென் படேல், விஜய் ரூபானி மற்றும் பூபேந்திரபாய் படேல் ஆகிய 4 பேர் முதல்வர்களாக இருந்த கால கட்டத்தில் குஜராத்தின் வணிகர்கள் மற்றும் சிறு தொழில்கள் என்ற பெயரில், கோல்  இந்தியா சுரங்கங்களில் இருந்து 60 லட்சம் டன் நிலக்கரி  எடுத்து அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவை அனைத்தும் வியாபாரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விற்காமல், பிற மாநிலங்களில் டன்னுக்கு ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை விற்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், ரூ.6,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘60 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை’. இதற்கு மோடி பதில் அளிக்க வேண்டும். இந்த நிலக்கரி ஊழல் குறித்து பிரதமர் ‘நண்பர்’ அமைச்சர் ஏதாவது சொல்வாரா? இதில் ரூ.6,000 கோடி ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பான, உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதியின் கீழ் காலவரையறையான விசாரணை அமைக்கப்பட வேண்டும். கடந்த 14 ஆண்டுகளில் குஜராத்தில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் நான்கு முதல்வர்களின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

Related Stories: