வேதாரண்யம் பகுதியில் மட்லீஸ் மீன்கள் வரத்து அதிகம்-மீனவர்கள் மகிழ்ச்சி

வேதாரண்யம் : வேதாரண்யம் பகுதி மீனவர்கள் வலையில் மட்லீஸ் மீன்கள் அதிகம் சிக்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரை வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வானவன் மாதேவி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் 65 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோடிக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் துவங்கி உள்ளது. அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள சீசன் காலத்தில் கோடிக்கரைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்வார்கள். நேற்று முன்தினம் 100க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடனுக்கு சென்றனர். மீனவர்களின் வலைகளில் அதிக அளவு மட்லீஸ் மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இங்கு பிடிக்கப்படும் மட்லீஸ் மீன்கள் ஐஸ் வைக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு இந்த மீன்களுக்கு அதிக மவுசு. நாள் ஒன்றுக்கு 2 டன் முதல் 4 டன் வரை மட்லீஸ் மீன்கள் கிடைத்தாலும், ஒரு கிலோ 50 முதல் 100 வரை ரூபாய்க்கு அதிகபட்சமாக கொள்முதல் செய்யப்படுகிறது. அதிகமாக மீன் கிடைத்ததாலும், வியாபாரிகளிடம் இருந்து நல்ல விலை கிடைத்தாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: