காஷ்மீரில் எஸ்ஐஏ அதிரடி பாக். தீவிரவாத அமைப்பு ஸ்லிப்பர் செல் சிக்கியது: ஒருவருக்கு ஒருவர் தெரியவில்லை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 10 பேரை மாநில விசாரணை முகமை கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் மாநில விசாரணை முகமை (எஸ்ஐஏ) உருவாக்கப்பட்டது. இந்த முகமையானது தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்துடன் தொடர்புடைய குற்றங்களை விசாரித்து வருகின்றது. இந்நிலையில், எஸ்ஐஏ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக ரகசியமாக செயல்பட்ட 10 பேரை அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் ஒருவரது நடவடிக்கை மற்றவர்கள் அறிந்திருக்கவில்லை.

ஜெய்ஷ் இ தீவிரவாத அமைப்பின் கமாண்டரிடம் இருந்து நேரடியாக உத்தரவுகளை பெற்றுள்ளனர். ‘ஸ்லிப்பர் செல்’ போல் செயல்பட்ட இவர்கள், தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்தல், நிதி உதவிக்கு ஏற்பாடு செய்தல், மத்திய காஷ்மீரில் ஆயுதங்களை கொண்டு செல்வது மற்றும் பிற தளவாட உதவிகளை செய்து வந்துள்ளனர். இந்த 10  பேரையும் எஸ்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், வங்கி கணக்கை பயன்படுத்தியது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: