மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் 33 ஆயிரம் பறவை இனங்கள் கணக்கெடுப்பில் கண்டுபிடிப்பு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய கணக்கெடுப்பில் 33,845 பறவை இனங்கள் நீர்நிலைகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் வனத்துறை சார்பில், பறவைகள் கணக்கெடுப்பு பணி, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையில், 40 வனத்துறை அலுவலர்கள், பறவையியல் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என 33 பேர் ஈடுபட்டனர்.

இவர்கள் மாவட்டத்தில் உள்ள வனச்சரக பகுதிகளான தூசூர், பழையபாளையம், சாரப்பள்ளி, வேட்டாம்பாடி, நாச்சிப்புதூர், இடும்பன்குளம், ஜேடர்பாளையம் படுகை அணை, பருத்திப்பள்ளி, அமிர்தசாகரம், ஓமையாம்பட்டி, முள்ளுக்குறிச்சி, தும்பல்பட்டி ஆகிய பகுதிகளில் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர். இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த கணக்கெடுப்பின் போது, நாமக்கல் வனக்கோட்ட பகுதிகளில் 22 வெளிநாட்டு பறவைகள் உள்பட 137 பறவை இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 33 ஆயிரத்து 845 பறவைகள் நீர்நிலைகளில் உலாவுவது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறுகையில், ‘மாவட்டத்தில் 18 ஈர நிலங்களில் நடைபெற்ற கணக்கெடுப்பில், மொத்தம் 137 வகையான 33,800க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியபட்டுள்ளன. மயில், உள்ளான், கருங்குருகு, செந்தலை, வல்லூறு போன்ற அரியவகை இனங்கள் உள்பட 110 வகையான உள்ளூர் பறவைகள், 22 வெளிநாட்டு பறவைகளும் கண்டறியப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: