33வது வார்டில் அடிக்கடி மக்களை சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்வேன்: குணசுந்தரி குட்டி மோகன் உறுதி

புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 33வது வார்டு திமுக வேட்பாளர் குணசுந்தரி குட்டி மோகன் நேற்று லட்சுமிபுரம், கலைமகள் நகர், டீச்சர்ஸ் காலனி, கடப்பா சாலை, வில்லிவாக்கம் சாலை, நந்தா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆரத்தி எடுத்து, மாலை, சால்வை அணிவித்து பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது குணசுந்தரி குட்டி மோகன் பேசுகையில், ‘‘நான் வெற்றி பெற்றதும் இங்குள்ள பகுதிகளில் தரமான சாலை அமைப்பேன். புதிய பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்கள், கூட்டு பட்டாவில் உள்ளவர்களுக்கு தனி பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

அனைத்து பகுதிகளிலும் மினரல் வாட்டர் வழங்கப்படும். தெருக்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். சுபகாரியங்கள் நடத்த சமுதாயக்கூடம், பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிக்க ஏற்பாடு செய்வேன். உயர்க்கல்வி பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்விக் கடன் கிடைக்க ஏற்பாடு செய்வேன். மக்களின் அடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். அடிக்கடி மக்களை சந்தித்து, குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யப்படும்.

எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின் போது, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: