வெங்காயம் சாப்பிட்ட மாதவன் லிப் டு லிப் கொடுக்க சிரமம்: பிபாஷா பாசு பேட்டி

மும்பை: மாதவனுடன் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க சிரமப்பட்டேன் என 10 ஆண்டுகள் கழித்து சொல்லியிருக்கிறார் பிபாஷா பாசு. மாதவன், பாலிவுட் நடிகை பிபாஷா பாசு இணைந்து நடித்த இந்தி படம் ஜோடி பிரேக்கர்ஸ். இந்த படம் கடந்த 2012ம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 10 ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் இடம்பெற்ற முத்தக் காட்சியை பற்றி பேசியிருக்கிறார் பிபாஷா பாசு. ‘ஜோடி பிரேக்கர்ஸ் படத்தில் மாதவனுடன் லிப் டு லிப் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. அந்த காட்சி படமானபோது, நான் நடிக்க கூச்சப்பட்டேன். காரணம், மாதவனின் மனைவி சரிதா ஸ்பாட்டில் இருந்தார். அவருக்கு முன்னால் மாதவனுடன் நெருங்கி நடிக்க சிரமப்பட்டேன். எப்படியோ அந்த காட்சியில் நடித்துவிட்டேன். அப்போதுதான் எனக்கு தெரிந்தது, மாதவன் சிறிது நேரத்துக்கு முன் வெங்காய உணவு எதையோ சாப்பிட்டிருக்கிறார். அதனால் முத்தக் காட்சியில் நடித்ததும் எனக்கு அந்த வாடையால் அலர்ஜி ஏற்பட்டுவிட்டது. உடனே எனது மேக்அப் அறைக்கு சென்று அமர்ந்துவிட்டேன். நான் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அங்கேயே இருந்தேன்’ என்றார். ஹீரோவுடன் முத்தக் காட்சியில் நடித்தபோது ஏற்பட்ட வினோத அனுபவம் பற்றி சொல்லுங்கள் என ஒரு நிருபர் பிபாஷாவிடம் கேட்டிருந்தார். அப்போதுதான் இந்த பதிலை அவர் கூறியிருக்கிறார்.

Related Stories: