ஏர்போர்ட்டில் ராம்சரண் முற்றுகை

ஐதராபாத்: தெலுங்கில் ஷங்கர் இயக்கும் படத்தில் ராம்சரண் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ராஜமுந்திரியில் நேற்று படமாக்க இருந்தனர். இதற்காக நேற்று காலையில் விமானம் மூலம் ராஜமுந்திரிக்கு ராம்சரண் வந்தார். அப்போது விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவர்கள், ராம்சரணை பார்த்ததும் பலர், அவருடன் செல்பி எடுக்கவும் அவரை தொட்டுப்பார்க்கவும் முண்டியடித்தனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்தினர். ராம்சரணை அழைத்துக்கொண்டு, காரில் ஏற்றி அவரை அனுப்பி வைத்தனர்.

Related Stories: