திருவண்ணாமலை நகராட்சி 17வது வார்டில் அனைத்து வசதிகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன்-திமுக வேட்பாளர் இந்து புகழேந்தி உறுதி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை நகராட்சி 17வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பு.இந்து புகழேந்தி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவரது கணவர் குட்டி க.புகழேந்தி, ஏற்கனவே  2001, 2006 மறறும் 2011ம் தேர்தல்களில் தொடர்ந்து வென்று 3 முறை நகராட்சி கவுன்சிலராக பணியாற்றியவர். மேலும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர், நகரமன்ற திமுக குழு தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர், கவுன்சிலராக பணியாற்றியபோது, இவரது வார்டில் 400க்கும் மேற்பட்டோருக்கு முதியோர், விதவை உதவித்தொகை, நூற்றுக்கும் மேற்பட்ேடாருக்கு ரேஷன் கார்டு பெற்றுத்தந்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் நிவாரண உதவிகள் வீடு வீடாக வழங்கினார். மேலும், குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றி மக்களிடம் நற்பெயரை பெற்றவர்.

மேலும், தூய்மை அருணை சேவை அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இவர், இளைஞர்களையும், தன்னார்வர்களையும் ஒருங்கிணைத்து, 17வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வீதி வீதியாக சென்று தூய்மைப்பணியில் ஈடுபட்டு வருகிறார். எனவே, 17வது வார்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களுக்கும், இவர் மீதான நம்பிக்கையும் நல்லெண்ணமும் அதிகம் உள்ளது.

மேலும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, 17வது வார்டில் திமுக தேர்தல் பணிமனையை திறந்து வைத்து, வேட்பாளர் இந்து புகழேந்திக்கு ஆதரவு திரட்டியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதோடு, மாநில மருத்தவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், இந்த வார்டில் வாக்கு சேகரித்து ஆதரவு திரட்டியிருக்கிறார்.

இந்நிலையில், திமுக வேட்பாளர் இந்து புகழேந்தி கூறியதாவது:

திருவண்ணாமலை நகரம் எப்போதும் திமுகவின் கோட்டை. அதிலும், 17வது வார்டு திமுகவுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிற பகுதி. தொடர்ந்து இந்த வார்டில் எண்ணற்ற பணிகளை நிறைவேற்றியிருக்கிறோம். ராமலிங்கனார் 1வது தெரு முதல் 13வது தெரு வரை அனைத்து வசதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். இந்த வார்டில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள ராமலிங்கனார் மெயின் ரோடு பகுதிக்கு தேவையான பணிகள் நிறைவேற்றப்படும்.

இந்த வார்டுக்கு தேவையான அனைத்து பணிகளையும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி நிச்சயம் நிறைவேற்றித்தருவோம். தரமான சாலை, தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் விநியோகம், தேவையான அனைத்து இடங்களிலும் தெரு விளக்குகள், ஒவ்வொரு வீதியையும் தூய்மையாக பராமரித்தல் உள்ளிட்ட பணிகளில் எப்போதும் அக்கறையுடன் செல்படுவோம்.

மேலும், நகராட்சி அலுவலகம் தொடர்பான சேவைகள், அரசு உதவித்தொகை மற்றும் நலத்திட்டங்களை பெற்றுத்தருதல், இந்த வார்டில் உள்ள மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டுதல் போன்றவற்றில் தனி கவனம் செலுத்துவோம். எந்த நேரத்திலும் பொதுமக்களின் குரலுக்கு செவிகொடுத்து, அவர்களுடைய கோரிக்கைளை நிறைவேற்ற முயற்சிப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: