வனவிலங்குகளை பாதுகாக்க போக்குவரத்துக்கு தடை மக்களின் சிரமத்தை தடுக்க மாற்று ஏற்பாடு: அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

சென்னை: எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம் வெளியிட்ட அறிக்கை: வன விலங்குகளைப் பாதுகாக்க ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மலைப்பாதை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் விவசாயப் பொருட்களை வழக்கம் போல கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், சென்னை, ஈரோடு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வெளியூர் சந்தைகளுக்கும் எடுத்துச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து தடை நடவடிக்கை விவசாயிகளையும், வணிகர்களையும் கடுமையாக பாதிக்கிறது. பொதுமக்கள் சுட்டிக்காட்டுவது போல விலங்குகளைப் பாதுகாக்க ஆங்காங்கே மேம்பாலங்கள் அமைப்பது, தடுப்பு வேலிகளை அமைப்பது போன்ற மாற்று வழிகளை தமிழக அரசு ஆராய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: