பெங்களூரு: பெங்களூரில் 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- தபாங் டெல்லி அணிகள் மோதின. இதில் தபாங் டெல்லி 32-31 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை தோற்கடித்தது. வழக்கம்போல் தமிழ் தலைவாஸ் வெற்றிபெற வேண்டிய ஆட்டத்தில் தோல்வியடைந்தது. யு மும்பா - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா 37-27 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தியது.