கொரோனாவால் ஓராண்டாக தடை; கும்பக்கரையில் குளிக்க அனுமதிக்க வேண்டும்: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

பெரியகுளம்: கொரோனாவால் ஓராண்டாக தடை விதிக்கப்பட்ட நிலையில், கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவலால் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் இந்த அருவிக்கு செல்லவும், குளிக்கவு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் நோய் தொற்று குறைந்த நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து அனைத்து சுற்றுலாத் தலங்கள் மற்றும் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்து வருகின்றனர்.

ஆனால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கும்பக்கரை அருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், அருவிக்குச் செல்லவும் தொடர்ந்து கடந்த ஓராண்டாக தடை உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினசரி வரும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும், தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களை அனுமதித்துள்ள நிலையில், கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்க தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: