குவாட் நம்பகத் தன்மையை யாராலும் குறைக்க முடியாது: சீனா எதிர்ப்புக்கு ஜெய்சங்கர் பதிலடி

மெல்போர்ன்: குவாட் அமைப்பினால், இந்தோ பசிபிக்  பிராந்தியத்துக்கு நன்மையே கிடைக்கும் என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்த கூட்டமைப்பு பற்றி கருத்து தெரிவித்த சீனா, தனது நாட்டின் வளர்ச்சியை தடுக்கவும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் தான் இந்த அமைப்பு பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம்சாட்டியது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மரீஸ் பெய்னே, ஜெய்சங்கர் ஆகியோர் நேற்று கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, சீனாவின் கருத்து குறித்து ஜெய்சங்கரிடம் கேட்ட போது, ‘‘கூட்டமைப்பில் உள்ள 4 பேரும் நன்மை பயக்கும் விஷயங்கள் பற்றிதான் பேசினோம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அமைதி, வளம் மற்றும் நிலைத்தன்மைக்காகதான்  இங்கு வந்தோம். எங்களுடைய முந்தைய பேச்சுகள், செயல்பாடுகள், நிலைபாடுகள்  அதில் தெளிவாக இருக்கிறது. தொடர்ந்து குவாட் அமைப்பை விமர்சிப்பதன் மூலம், அதன் நம்பகத்தன்மையை யாராலும் குறைத்துவிட முடியாது,’’ என்றார்.

Related Stories: