புதுச்சேரி: புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகர்-2 அழகர்சாமி கோயில் வீதியை சேர்ந்தவர் பிராங்க்ளின் (59). பொதுப்பணித்துறையில் கட்டிட பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்தார். அதிமுக பிரமுகராக இருந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திமுகவில் சேர்ந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் நேற்று மாலை 4.30 மணியளவில் மனைவி, மகள், பேரக்குழந்தைகள் இருந்தனர். பிளாங்க்ளின் வீட்டில் இல்லை. அப்போது ஒரு ஸ்கூட்டரில் 2 மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்களில் ஒரு நபர், ஸ்கூட்டரில் மறைத்து வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை எடுத்தார்.