தமிழகத்தில் புதிதாக 3,592 பேருக்கு கொரோனா

சென்னை:   கொரோனா   பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில்  தமிழக அரசு எடுத்த  நடவடிக்கையின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக  குறைந்து வருகிறது.  அதன்படி நேற்று பாதிப்பு எண்ணிக்கை 3,592 பேருக்கு தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இது  குறித்து  மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் நேற்று    1,10,346 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  இதில் 3,592 பேருக்கு  தொற்று    உறுதி செய்யப்பட்டது. அதன்படி இதுவரை 34  லட்சத்து 28 ஆயிரத்து 68 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கொரோனாவிற்கு சிகிச்சை  பெற்று வந்த 14,182 பேர்     குணமடைந்து வீடு  திரும்பினர். அதன்படி இதுவரை 33 லட்சத்து 23 ஆயிரத்து 214 பேர்  குணமடைந்துள்ளனர். அதன்படி கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66,992 ஆக உள்ளது.

மேலும்  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று     வந்த 25  பேர் நேற்று சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தனர். அரசு     மருத்துவமனைகளில் 16    பேரும், தனியார்  மருத்துவமனையில் 9 பேரும் நேற்று     உயிரிழந்தனர். இதையடுத்து மொத்தம்  37,862 பேர்   உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  அதிக பட்சமாக சென்னையில் 663, கோவை 654 பேர் என இரண்டு மாவட்டங்களை தவிர மற்ற பாதிப்பு எண்ணிக்கை 500க்கும் கீழ் குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: