அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் மதிமுக: வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களை பாதுகாத்திட, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு தொடங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வரும் - திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அமைப்பில் இணைந்திட முன்வருமாறு 37 கட்சிகளின் தலைவர்களுக்கு, கடிதம் வாயிலாக அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த வரிசையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அழைப்பு விடுத்து மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இதை ஏற்று, அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பின் மதிமுக பிரதிநிதியாக, கழகத்தின் தேர்தல் பணிச் செயலாளர் வழக்கறிஞர் ஆவடி அந்திரிதாஸ் செயல்படுவார் என அறிவித்து, முதல்வரின் முயற்சிகளுக்கு வரவேற்பையும், வாழ்த்தையும் தெரிவித்து பொதுச்செயலாளர் வைகோ முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: