ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் தனித்துப்போட்டியால் மாயமான தேமுதிக, அமமுக: குறைந்த இடங்களில் பாஜ, பாமக போட்டி

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 10,463 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 12வது வார்டில் திமுக வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனால், திமுகவும், அதிமுகவும் 14 இடங்களிலும் நேரிடையாக மோதுகின்றன. சுயேச்சைகள் 13 இடங்களிலும் போட்டியிடுகின்றன. தனித்துப் போட்டி என்பதால் பாஜ 9 இடங்களிலும்,  பாமக 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஆனால், தேமுதிக கட்சியில் தேர்தலில் நிற்பதற்கே ஆட்கள் இல்லாததால் யாரும் இங்கு போட்டியிடவில்லை.  

அமமுக கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக ஊத்துக்கோட்டையை சேர்ந்த ராசமாணிக்கம் இருந்தார். அவர், அக்கட்சியில் இருந்து விலகி கடந்த சில மாதத்திற்கு முன்னால் அதிமுகவில் இணைந்தார். அதனால், அமமுகவில் யாரும் இல்லை. அமமுகவில் இருந்த அம்பேத்கர் நகர் சரவணன் உறவினர் அதிமுகவில் 13வது வார்டில் நிற்பதால் அவர் அமமுகவில் நிற்காமல் அவரது மனைவியை சுயேச்சையாக தேர்தலில் நிற்க வைத்துள்ளார். அதிமுகவிலிருந்து வெறியேறிய தேமுதிகவும், தனியாக உள்ள அமமுக கட்சிக்கும்  நிற்பதற்கு ஆட்கள் இல்லாததால் தனித்து விடப்பட்டுள்ளன. இந்த கட்சிகளின் உண்மையான தொண்டர்கள் எங்கே போனார்கள் என்று முணுமுணுக்க தொடங்கியுள்ளனர்.

Related Stories: