தேவையற்ற கிரகங்கள் விலகியது நல்ல சகுனம்: பாஜவை தாக்கிய ஓ.எஸ்.மணியன்

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி  ஸ்ரீரங்கம் கோட்டத்தில் முதல் 7 வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் ஸ்ரீரங்கம் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.திருச்சி  மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேட்பாளர்களை  அறிமுகப்படுத்தி பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் ஒன்பது தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறாத நிலையில், இத்தேர்தலில் முழு வெற்றி பெற்று வரலாறு  படைக்க வேண்டும். ஜாதகத்தில் தேவையில்லாத இடங்களில் தேவையில்லாத கிரகங்கள்  இருப்பது ஆகாது. அதுபோன்று நம்மிடம் இருந்த தேவையற்ற கிரகங்கள் (பாஜ)  விலகியது நல்ல சகுனம். இனி நாம் சுதந்திரமாக பணியாற்றலாம். நாம் நிச்சயம்  வெற்றி பெறுவோம்’’ என்றார்.

Related Stories: