141வது வார்டில் 24 மணி நேரமும் குறைதீர்ப்பு மையம்: திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் வாக்குறுதி

சென்னை: 24 மணி நேரமும் மக்கள் குறை தீர்ப்பு மையம் தொடங்கப்படும் என்று 141 வார்டு திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் உறுதியித்தார். மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சென்னை மாநகராட்சி 141 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் ராஜா அன்பழகன் போட்டியிடுகிறார். அவர் இன்று கொலை சித்திவிநாயகர் கோவில் தெரு மற்றும் வரதராஜன் தெரு ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பெண்களின் கோரிகைக்கு இணங்க 141 வது வார்டில் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காக சுய வேலை வாய்ப்பு மையம் தொடங்கப்படும் என்றும்

மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஊக்குவிக்கப்பட்டு பெண்களின் முன்னேற்றத்திற்காக என்றும் பாடுபடுவேன் என்றும் அங்குள்ள குடியிருப்பு வீட்டு மனைகளில் பட்டா இல்லா குடியிருப்புகளுக்கு அரசிடம் முறையிட்டு பட்டா வழங்கப்படும் என்றும் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றும் வகையில் 24 மணிநேர மாமன்ற உறுப்பினர் மக்கள் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டு அவர்கள் குறைகள் போக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். மேலும் அவருக்கு பெண்கள் உற்சாகமாக ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து ஆதரவு தெரிவித்தனர். பிரச்சாரத்தின் போது கோ. உதயசூரியன் வட்டக் கழக செயலாளர்கள் எஸ்.லட்சுமி காந்தன், வி.கே. மணிகண்டன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெ. ஜானகிராமன், எஸ். ராமலிங்கம், எல். வீரப்பன், பி.மாரி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்று ஆதரவு திரட்டினர்.

Related Stories: