முதல்வர் வேட்பாளருக்கு என் கணவர்தான் தகுதியானவர்: முதல்வர் சன்னி ஏழையல்ல; சித்துவின் மனைவி ஆவேசம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஞாயிறன்று அறிவித்தார். அப்போது பேசிய ராகுல், பஞ்சாப் மக்கள், வறுமை மற்றும் பசியை புரிந்து கொள்ளக்கூடிய ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த முதல்வர் தேவை என்றனர். இது மிகவும் கடினமாக முடிவு. மக்கள் அதனை எளிதாக்கி விட்டனர்,’ என்று கூறி முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை அறிமுகம் செய்தார். இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், ராகுலின் கருத்தை விமர்சித்துள்ளார்.

அமிர்தசரசில் நேற்று அவர் அளித்த பேட்டியில், , ‘‘கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய எனது கணவர் நவ்ஜோத் சிங் சித்து, முதல்வர் வேட்பாளருக்கு சரியான தேர்வாக இருந்திருப்பார். அவர் 6 மாதங்களில் பஞ்சாபை மாற்றியிருப்பார். எங்களை விடவும் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி வசதி படைத்தவர். அவர் மிகவும் பணக்காரர். அவரது வங்கி கணக்கில் மிகப்பெரிய தொகை உள்ளது. அவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்று முத்திரை குத்துவது தவறானது,” என்றார். சன்னியை கடுமையாக எதிர்த்து வந்த சித்து, ராகுல் அவரை முதல்வராக வேட்பாளராக அறிவித்த பிறகு மவுனம் சாதிக்கிறார். ஆனால், அவருக்கு பதிலாக அவருடைய மனைவி கவுர், இந்த விமர்சனத்தை வைத்திருப்பதாக கருதப்படுகிறது.

தேர்தல் ஆணையம்  எச்சரிக்கை

இந்த மாதம் 27, மார்ச் 3ம் தேதிகளில்  மணிப்பூரில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நேற்று இங்கு சென்று தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர்  அளித்த பேட்டியில், ‘தேர்தலில் பண பலமும், அரசு இயந்திரமும் துஷ்பிரயோகம் செய்வதை தேர்தல் ஆணையம் சகித்துக் கொள்ளாது. பாரபட்சமாக செயல்படும் தேர்தல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என எச்சரித்தார்.

Related Stories: