4 வீரர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா; இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்ப்பு

அகமதாபாத்: வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒன்டே மற்றும் 3 டி-20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் ஒருநாள் போட்டிகள் அகமதாபாத்தில் வரும் 6,9,11ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் அங்கு வந்தடைந்து 3 நாள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.  இதனிடையே இந்திய வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொடக்க வீரர்கள் தவான், ருதுராஜ் கெய்க்வாட், மிடில் ஆர்டர் பேட்டர் ஸ்ரேயாஸ் அய்யர், நெட் பவுலர் நவ்தீப் சைனி மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் திலீப், பாதுகாப்பு தொடர்பு அதிகாரி லோகேஷ் மற்றும் மசாஜ் தெரபிஸ்ட் ராஜீவ்குமார் என 7 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்திய அணியில் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இன்று அணியுடன் இணைவார். 4 வீரர்களுக்கு தொற்று பாதித்த போதியிலும் வரும் 6ம் தேதி திட்டமிட்டபடி முதல் ஒருநாள்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய வீரர்கள் இன்று முதல் பயிற்சியை தொடங்க இருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கே.எல்.ராகுல் தனது சகோதரரின் திருமணத்திற்காக முதல் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதனால் இந்தியா ரோகித் ஷர்மா, விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்  பன்ட் மற்றும் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா , ரிஷிதவான் ஆகிய பேட்டர்களுடன் களம் இறங்கும் என தெரிகிறது.

Related Stories: