நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் திண்டிவனம் ஸ்டிராங் ரூமில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு

திண்டிவனம் : திண்டிவனத்தில் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்படும் ஸ்டிராங் ரூமை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு செய்து ஆலோசனைகள் நடத்தினார்.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கு கடந்த 28ம் தேதி மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் வாக்குப் பெட்டிகள் வைக்கும் அறைகளை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் திண்டிவனத்தில் உள்ள 33 வார்டுகளில் நடைபெறும் நகர மன்ற தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் புதுச்சேரி சாலையில் உள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை நேற்று திண்டிவனம் தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான சவுந்தர்ராஜன் நேரில் பார்வையிட்டு போலீசாரிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஸ்டிராங் ரூமில் தடுப்புகள் அமைப்பது, சிசிடிவி கேமரா பொருத்தல், ஒலிபெருக்கி அமைப்பது, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டனர். இதில் பொறியாளர் தனபாண்டியன், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் தேவநாதன், மோகன், கிருஷ்ணமூர்த்தி, காவல் ஆய்வாளர் புகழேந்தி, உதவி ஆய்வாளர்கள் வேல்முருகன், ஆனந்தராசன், நகரமைப்பு ஆய்வாளர் கமலின் சுகுணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: