ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் திறப்பு

செய்துங்கநல்லூர்: ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டன. இதில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மண்டை ஓடுகள், பற்கள் வியப்பில் ஆழ்த்தின. தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான முதற்கட்ட பணியாக பரம்பு பகுதியில் அகழாய்வு பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் ஏராளமான தொல்லியல் பொருட்களும், முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்வாறு மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் முன்னிலையில் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் நேற்று திறக்கப்பட்டன. இதில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் மண்டை ஓடு, கை, கால் எலும்புகள், தாடை, பற்கள் இருந்தன. இவை வியப்பில் ஆழ்த்தின. இத்தகைய தாடை மற்றும் பற்கள் மூலம் ஆதி மனிதனின் காலத்தையும் வாழ்க்கை முறையையும் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் ெதரிவித்தனர். இது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: