அனுமதியின்றி பேரிச்சம்பழம், குர்ஆன் இறக்குமதி அமீரக தூதருக்கு நோட்டீஸ் சுங்க இலாகாவுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தூதரகம் உள்ளது. இந்த தூதரகம் மூலம் கடந்த இரு வருடங்களுக்கு முன் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சுங்க இலாகா நடத்திய விசாரணையில் தங்கக் கடத்தலுக்கு அமீரக துணைத் தூதர் ஜமால் அல் சாபி உள்பட தூதரகத்தில் உள்ள சில முக்கிய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் இந்த தூதரகம் வழியாக துபாயில் இருந்து 10 ஆயிரம் கிலோவுக்கு மேல் பேரிச்சம்பழம் மற்றும் நூற்றுக்கணக்கான குர்ஆன் புனித நூல்கள் கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டன.

இவற்றை துபாயில் இருந்து இறக்குமதி செய்ய முறையான  அனுமதி பெற வில்லை. இதுதொடர்பாக சுங்க இலாகாவினர் வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையே துபாய் சென்ற துணைத் தூதர் ஜமால் அல் சாபி மற்றும் அவருக்கு அடுத்த  பொறுப்பிலிருந்த அட்டாஷே ராஷித் கமிஸ் ஆகியோர் இந்தியா திரும்பவில்லை. அவர்களிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா துறை ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தது. இந்நிலையில் இருவருக்கும்  விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சுங்க இலாகாவுக்கு வெளியுறவு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் சுங்க இலாகா  விரைவில் நோட்டீஸ் கொடுக்க தீர்மானித்துள்ளது.

Related Stories: