காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடந்த நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் உள்ள வாக்காளர்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 156 வார்டுகளுக்கு 384 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 1,76,257 ஆண்கள், 1,87,338 பெண்கள் 57 திருநங்களைகள் என மொத்தம் 3,63,652 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செலுத்த உள்ளனர்.