மதுராந்தகம் நகராட்சியில் முதல்நாளில் ஒரேவொரு வேட்பாளர் மனுத்தாக்கல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகள், மறைமலைநகர், செங்கல்பட்டு, மதுராந்தகம், கூடுவாஞ்சேரி ஆகிய நகராட்சிகளில் 108 வார்டுகள், மாமல்லபுரம், திருப்போரூர், இடைக்கழிநாடு, அச்சிறுப்பாக்கம், திருக்கழுக்குன்றம், கருங்குழி ஆகிய பேரூராட்சிகளில் உள்ள 99 வார்டுகள் என மொத்தம் 277 பதவிகளுக்கு  நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு இயந்திரங்கள் தயார் படுத்தப்படுகிறது.

வேட்புமனு தாக்கல், நேற்று துவங்கியது. இதையொட்டி, வேட்புமனுக்களை அரசியல் கட்சியினர் ஆர்வமாக பெற்று சென்றனர். முதல் நாளான நேற்று மதுராந்தகம் நகராட்சியில், கவுன்சிலர் பதவிக்கு ஒருவர் மட்டுமே வேட்புமனு  தாக்கல் செய்தார்.  இன்று 2வது நாள் என்பதால் பலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்யக்கூடும் என கருதப்படுகிறது. இதையொட்டி, அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

Related Stories: