சிறுவன் வந்தது மகிழ்ச்சி; சீனா ஆக்கிரமித்துள்ள நிலம் எப்போது வரும் பிரதமரே!.. ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி:  ‘சீனா ஆக்கிரமித்துள்ள நிலப்பகுதி இந்தியாவிற்கு எப்போது கிடைக்கும்?’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். அருணாச்சலப் பிரதேச மாநிலம், அப்பர்சியாங் மாவட்டத்தில் உள்ள ஜிடோ என்ற இடத்தை சேர்ந்த மிரம் தரோன் (17) என்ற சிறுவன் கடந்த 18ம் தேதி சீனா எல்லை அருகே மாயமானான். அவனை சீன ராணுவம் கடத்தியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், அவனை சீன ராணுவம் நேற்று முன்தினம் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது.

இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மாயமான சிறுவன் மிரம் தரோனை சீனா திருப்பி அனுப்பியது ஆறுதல்  தருவதாக உள்ளது. ஆனால், சீனா ஆக்கிரமித்துள்ள நிலத்தை இந்தியா எப்போது திரும்பப் பெறும் பிரதமரே...?’ என்று கேட்டுள்ளார்.

Related Stories: