வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே பழைய பாலாறு பாலத்தின் சிமென்ட் கான்க்ரீட் மழை வெள்ளத்தில் சேதம்

* உறுதித்தன்மை கேள்விக்குறியானது

* ஆய்வு செய்து சீரமைக்க கோரிக்கை

வேலூர் : தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. அதேபோல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பெய்ததன், காரணமாக வேலூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலாற்றின் இருகரைகளையும்  தொட்டபடி 1 லட்சம் கனஅடி வெள்ளம் புரண்டோடியது. இதனால் கரையோரம் இருந்த வீடுகள், கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. விரிஞ்சிபுரம் தரைப்பாலமே அடித்துச்செல்லப்பட்டது.

மேலும் திருப்பத்தூர் தொடங்கி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வரையில் பாலாற்றில் புதைக்கப்பட்டிருந்த குடிநீர் பைப்லைன்களும் அடித்துச்ெசல்லப்பட்டது. இந்த காட்டாற்று ெவள்ளத்தில் வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பழைய பாலாறு பாலமும் சற்று ஆட்டம் கண்டுள்ளது. பழைய பாலாற்று பாலத்தில் தூண்களுக்கு அடியில், சிமென்ட் கான்கிரீட் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பாலத்தின் உறுதித்தன்ைம கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த பாலமானது, தமிழகம் ஆந்திராவை இணைக்கும் முக்கிய பாலமாக உள்ளது. எனவே, 24 மணிநேரமும் லட்சக்கணக்கான வாகனங்கள் இப்பாலத்தை கடந்து செல்கிறது. மிக முக்கிய வழித்தடமாக இப்பாலம் அமைந்துள்ளது. இப்பாலம் சுமார் 40 ஆண்டுகளையும் கடந்து பயணிப்பதால், அதன் உறுதித்தன்மை வலுவிழந்து காணப்பட்டது. இதனால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழைய பாலாற்று பாலத்தின் அடியில் சுமார் ₹3 கோடியில், சிமென்ட் கான்ரீட் அமைக்கப்பட்டது.

அப்போதே, பாலத்திற்கு இருபுறமும் கான்கிரீட் போட்டிருந்தால், மழைவெள்ளத்திற்கு கான்க்ரீட் தளம் தாக்குபிடித்திருக்கும். வலதுபுறம் மட்டும் கான்க்ரீட் போட்டுவிட்டு, இடது புறம் போடாமல் அப்படியே விட்டதால், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ராட்சத பள்ளம் போன்று உருவாகி, 10 தூண்களுக்கு அருகே இருந்த கான்க்ரீட்கள் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. எனவே வேலூர் பழைய பாலாறு பாலத்தினை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதிய பாலம் அமைக்க ேவண்டும்

ேவலூர் பழைய பாலாறு பாலம் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகளை கடந்துள்ளது. ஏற்கனவே இந்த பாலத்தின் கைப்பிடி சுவர்கள் இடிந்து விழுந்து, ஆங்காங்கே சுவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, பாலத்தின் அடியில் சிமென்ட் கான்க்ரீட் வெள்ளத்தில் அடித்துச்ெசல்லப்பட்டு, பாலம் மிகவும் வலுவிழந்துள்ளதால், புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Stories: