மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

செய்யூர்: செய்யூரில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில், மருத்துவ முகாம் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. வட்டாட்சியர் வெங்கட்ரமணன் தலைமை தாங்கினார். முகாமில் எலும்பு, கண், காது, மூக்கு, பக்கவாத நோய்க்கான மருத்துவ சிறப்பு நிபுணர் குழு கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து, அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர். இதில், 150க்கும் மேற்பட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க வட்டார தலைவர் ஏழுமலை, சங்கத்தின் துணை தலைவர் வெள்ளிகண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: