சென்னையில் புறா வளர்ப்பதில் ஏற்பட்ட மோதலில் இளைஞரை கொலை செய்த இருவர் கைது..!!

சென்னை: சென்னையில் புறா வளர்ப்பதில் ஏற்பட்ட மோதலில் இளைஞரை கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மந்தைவெளியை சேர்ந்த 36 வயதான சதீஷ் கட்டுமான தொழிலாளியாக இருந்த வந்தார். நேற்று மனைவி, குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், 19 வயதான இரு இளைஞர்களுடன் வீட்டின் மொட்டை மாடியில் சதீஷ் மது அருந்தியுள்ளார். அப்போது புறா வளர்ப்பது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்கனவே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போதையில் இருந்த சதீஷின் முதுகிலும், தோள்பட்டையிலும் கத்தியால் குத்திவிட்டு இருவரும் தப்பி ஒடிவுள்ளார்கள். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மந்தைவெளி போலீசார், உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய ரஞ்சித் மற்றும் ஹரிஹரனை தேடி வந்த நிலையில், அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: