இன்னைக்கே நகை வாங்கலாம்!... தங்கம் விலை சவரன் ரூ.504 குறைந்து ரூ.36,592க்கு விற்பனை; வாடிக்கையாளர்கள் குஷி!!

சென்னை: கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக  தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது.சமீப காலமாகவே தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். ஏதோ ஒரு நாள் விலை குறைந்தாலும் அடுத்த நாளே மிகப் பெரிய அளவில் விலை உயர்த்தப்படுகிறது. இந்நிலையில் மகிழ்ச்சி தரும் விதமாக தங்கம் விலை இன்று அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (ஜனவரி 27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,574 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,367 ரூபாயாக இருந்தது.

அதேபோல, நேற்று 37,096 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 504 ரூபாய் குறைந்து 36,592 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.68.50 ஆக இருந்தது. இன்று அது ரூ.67.70 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 5,003 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,940 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, நேற்று 40,024 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 504 ரூபாய் குறைந்து 39,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Related Stories: